ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையில், பொருள் பண்புக்கூறு மற்றும் பகுப்பாய்வின் உபகரண முறைகள், தவிர்க்க முடியாத ஒரு முக்கிய அம்சமாகும். காரைகுடியின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.எஸ்.ஐ.ஆர்) - மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.இ.சி.ஆர்.ஐ.) "பகுப்பாய்வு உபகரண பயன்பாட்டு மையம் (சி.ஐ.எஃப்)" ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பல வகையான அதிநவீன பகுப்பாய்வு உபகரணங்கள் வாங்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது. தொகுக்கப்பட்ட பொருட்களின் வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகள், அதன் தன்மை, கட்டமைப்பு, நிர்ணயம் மற்றும் ஸ்பெக்ட்ரல் அளவீடுகள் போன்றவற்றை அறிவதில் இவ்வுபகரணங்கள் பெரும் பங்களிக்கின்றன.
இதன் மூலம் சி.எஸ்.ஐ.ஆர் - சி.இ.சி.ஆர்.ஐ, இங்கு பணிபுரியும் அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு சேவையை வழங்குகிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளிலுமுள்ள ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள், இங்குள்ள வசதியை பயன்படுத்திக்கொள்கிறார்கள். இங்குள்ள உபகரணங்கள் கீழ்கண்ட நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்றன.
ஒளியியல் ஸ்பெக்ட்ரோஸ்கோபி நுட்பங்கள், காந்த ஒத்ததிர்வு ஸ்பெக்ட்ரோஸ்கோபி நுட்பங்கள், எக்ஸ்-ரே நுட்பங்கள், மைக்ராஸ்கோப்பிக் நுட்பங்கள், வெப்ப பகுப்பாய்வு, அடிப்படை பகுப்பாய்வு, பிரிப்பு நுட்பமான குரோமடோகிராஃபிக் நுட்பங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பகுப்பாய்வு உபகரணங்ககளின் பட்டியல் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வ. எண் |
உபகாரணத்தின் பெயர் |
1. |
ஃபோரியர் டிரான்ஸ்ஃபார்ம் அகச்சிவப்பு ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர்
(எஃப்.டி.ஐ.ஆர்) |
2. |
யூவி-விசிப்பில்-என்.ஐ.ஆர். ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர் |
3. |
ஃப்ளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோஃபோட்டோமீட்டர் |
4. |
லேசர் ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி |
5. |
ஃபோரியர் டிரான்ஸ்ஃபார்ம் நியூக்ளியர் மேக்னெட்டிக் ரெசோனன்ஸ்
ஸ்பெக்ட்ரோமீட்டர் (எஃப்.டி.என்.எம்.ஆர்) |
6. |
எலெக்ட்ரான் பாரா மேக்னெட்டிக் / ஸ்பின் ரெசோனன்ஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர்
(இ.பி.ஆர் / இ. எஸ்.ஆர்) |
7. |
எக்ஸ்-ரே டிவ்ரேக்டோமீட்டர் (எக்ஸ். ஆர். டி.) |
8. |
எக்ஸ்-ரே டிவ்ரேக்டோமீட்டர் (எக்ஸ். ஆர். டி.) - பல்நோக்கு |
9. |
எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் ஸ்பெக்ட்ரோமீட்டர் (எக்ஸ். ஆர். எஃப்.) |
10. |
எக்ஸ்-ரே ஃபோட்டோ எலெக்ட்ரான் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (எக்ஸ்.பி.எஸ்) |
11. |
இமேஜ் பகுப்பாய்வி உலோகவியல் நுண்ணோக்கி |
12. |
ஸ்கேனிங் எலெக்ட்ரான் நுண்ணோக்கி (எஸ்.இ.எம்.) |
13. |
புலம் உமிழ்வு ஸ்கேனிங் எலெக்ட்ரான் மைக்ரோஸ்கோபி (எஃப்.இ.எஸ்.இ.எம்.) |
14. |
டிரான்ஸ்மிஷன் எலெக்ட்ரான் நுண்ணோக்கி (டி. இ.எம்.) |
15. |
உயர் பிரித்தறிதல் டிரான்ஸ்மிஷன் எலெக்ட்ரான் நுண்ணோக்கி (எச்.ஆர்.டி.இ.எம்.)
ஆற்றல் பரவக்கூடிய எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோஸ்கோபியுடன் (இ.டி.எஸ்.) |
16. |
உயர் பிரித்தறிதல் டிரான்ஸ்மிஷன் எலெக்ட்ரான் நுண்ணோக்கி (எச்.ஆர்.டி.இ.எம்.) |
17. |
ஸ்கேனிங் ப்ரோப் மைக்ரோஸ்கோபி (எஸ்.பி.எம்) |
18. |
முனை மேம்படுத்தப்பட்ட ராமன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி (டி. இ.ஆர்.எஸ்) |
19. |
துகள் அளவு பகுப்பாய்வி (பிஎஸ்.எ) |
20. |
உயர் செயல்திறன் திரவ குரோமடோகிராபி (எச்.பி.எல்.சி.) |
21. |
ஜெல் ஊடுருவல் குரோமடோகிராபி (ஜிபிசி) |
22. |
ஜி.சி-எம்.எஸ் குரோமடோகிராபி -ஸ்பெக்ட்ரோஸ்கோபி |
23. |
வெப்பநிலை பண்பேற்றப்பட்ட வேறுபட்ட ஸ்கேனிங் கலோரிமெட்ரி (டி.எம்.டி.எஸ்.சி) |
24. |
ஒரே நேர வெப்ப பகுப்பாய்வி டிஜிஎ / டிடிஎ / டிஎஸ்சி |
25. |
தானியங்கி வெப்ப பகுப்பாய்வி - டிஜிஎ / டி.எஸ்.சி. |
26. |
அட்டாமிக் அப்ஸார்ப்ஷன் ஸ்பெக்ட்ரோபோட்டோமீட்டர் (எ.எ.ஸ்) |
27. |
சி.எச்.என்.எஸ். எலமெண்டல் அனலைசர் |
28. |
மைக்ரோ ஹார்ட்நெஸ் டெஸ்டர் |